இத்தால் சகலமானவருக்கும் அறிவிப்பது என்னவென்றால் பெயர் குழப்பம் காரணமாக " என் மனவானில் " என் ஆரம்பிக்கப்பட்ட எனது வலைத்தளம் பின்னர் "என் மனவெளியில் " என் மாற்றப் பட்டிருந்தது. அதிலும் கரிகாலன் என்னும் நண்பர் 1 1/2 வருடமாக அப்பெயரில் வலைப் பதிவொன்றை வைத்திருப்பதாக அறிவித்த படியால் எனது வலைத்தளம் "என் வான்வெளியில்" என்ற பெயருடன் பொங்கல் முதல் வெளிவருகின்றது என்பதை சகலமானவருக்கும் அறியத்தருகின்றேன்.
டுண்ட் .... டுண்ட் .... டுண்ட் .....டுண்ட் .......
எனது மற்றொரு வலத்தளமான " சிந்து " தொடர்ந்தும் அதே பெயரிலேயே
வெளிவரும் என்பதையும் அறியத்தருகின்றேன்.
இது சம்பந்தமாக " தமிழ்மணம் " நிர்வாகிகள் ஆவன செய்யுமாறு அன்புடன் வேண்டுகின்றேன். "சிந்து " வில் " டெம்லேட்" இல் எதை மாற்றினேனோ யானறியேன். பதிவின் பின்னால் பின்னூட்டம் செய்யும் வசதி இல்லாதிருக்கின்றது.
தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் உதவினால் பின்னூட்டம் 'கிளிக்'க வசதியாக இருக்கும்.
உங்கள் ஆதரவுக்கு நன்றி....
--- அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் -----
Saturday, January 14, 2006
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
உங்களுக்கு பொங்கல் வாழ்த்துகள். உங்கள் குடும்பத்தில் அன்பும் , வளமும் பொங்கல் போல் என்றும் பொங்கட்டும்.
அன்புடன்
கல்வெட்டு
ம்.
உங்கள் மற்ற வலைப்பதிவில் இடப்படும் எந்தப் பின்னூட்டமும் என் கணிணியில் தெரியவில்லை. பின்னூட்டமிடும் இணைப்புக்கூட என் கணிணியில் தெரியவில்லை. நூற்றுக்கணக்கான வலைப்பக்கங்களில் உங்கள் பக்கம் மட்டும்தான் இப்படி முரண்டுபிடிக்கிறது எனக்கு.
தனியே பதிவுகளை மட்டும் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
கல்வெட்டு உங்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்.
வசந்தன்!
அதுதான் மேலே சொல்லியிருக்கின்றேன். அப்பதிவில் 'சிந்து' என்பதை கிளிக் செய்து முதற் பக்கம் வந்தால் மட்டும் பின்னூட்டம் இட வசதியிருக்கின்றது. நந்தவனத்தில் இருந்து வரும் நேரடிப் பக்கத்தில் மட்டும் இந்த பின்னூட்டம் இடும் வசதி தெரியமாட்டேன் என்கிறது.
என்ன மாற்றம் டெம்லேட் இல் செய்தால் தகும் என்று தெரியவில்லை!!!!!!!
இளந்திரையன் வணக்கம். உங்கள் வலைப்பதிவை வாசிப்பதுண்டு. வசந்தன் சொன்னது போல் சிந்துவில் பின்னூட்டம் இட பலபடியும் முயன்று முடியாமல் போனவர்களில் நானும் ஒருவன்.
உங்கள் வரவுக்கு நன்றி குளக்கோட்டன். "சிந்து" இல் கிளிக் செய்து முன்பக்கம் வந்தால் பின்னூட்டம் இடும் வசதியிருக்கின்றது. நேரடியாகப் பதிவில் பின்னூட்டம் இடும் வசதியைத் தான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.
நன்றி உங்களுக்கு.
அன்புடன் இளந்திரையன்
சரி, இப்ப விசயம் தெரிஞ்சிட்டுது தானே. இனிப்பிரச்சினையில்லை. இப்போதைக்கு ஒவ்வொரு பதிவிலயும் அடியில சின்னக்குறிப்பொண்டு போட்டுவிடும், எப்பிடிப் பின்னூட்டம் போடுறதெண்டு.
தமிழ்ப் பக்கத்திலிருந்து வரும் நேரடிப் பக்கத்திற்கான பின்னூட்டத் தொடுப்பு ஏன் வேலை செய்ய்ச்வில்லை என்று புரியவில்ல....உங்கள் அன்புக்கு நன்றி வசந்தன்
'சிந்து' வலைப்பதிவில் பின்னூட்டப் பிரச்சினைக்கு, blogger-இல் log-on பண்ணி,
settings-இல்,
comments- option- உள்
comments 'show' or 'hide'என ரெண்டு தேர்வுகள் உண்டு; அதில் hide-ஐ தேர்வு செய்திருக்க வாய்ப்புள்ளதா?
check-பண்ணிப் பாருங்கள்.
----------------------
தொடர்ந்து எழுதுங்கள்..
hide-ஐ தேர்வு செய்திருந்தால் 'show' தேர்வு செய்தால் சரியாயிருமென நினைக்கிறேன் - அதுதான் பிரச்சினையென்றால்..!
good luck!
உங்கள் உதவிக்கு நன்றி பிரதீபா ,
அதிலெல்லாம் பிரச்சனை இல்லை. show இல்தான் இருக்கின்றது. Template இல் தான் எடிட் செய்யும்போது எதையோ மாற்றி விட்டேன். comment link ஐ முழுவதுமாக அழித்து விட்டு புதிதாக cut and paste செய்து பார்த்தும் சரிவரவில்லை. முன்பக்கம் வருவது போல் comments link மட்டுமல்ல home link உம் வரவில்லை. ஏதாவது புரிகின்றதா பாருங்கள்.
-அன்புடன் இளந்திரையன்
Post a Comment