வைத்தது யார்?
-------------------
நீராடை போர்த்த பூமி
நிமிடத்தில் நீங்கும் காற்று
நிலவுக்கும் கதிருக்கும்
பிரித்த பொழுது
பஞ்சமேயில்லாத
பிரபஞ்சம்
நடுவில் நான்
வைத்தது யார்?
சுனையூற்று
-----------------
உன்னைப் பார்த்ததும்
உமிழ்ந்தது மகிழ்ச்சி
வடிகட்டி
உதடு வீசியது
ஒரு புன்னகை
கருமியல்ல
காதல் என்பது
சுனையூற்று.
Thursday, February 16, 2006
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
முதல் கவிதைக்கு எனது சபாஷ்.
-ஞானசேகர்
உங்கள் வருகைக்கு நன்றி ஞானசேகர்.
Post a Comment