உன்னை நான்
அறிந்து கொள்வதும்
என்னை நீ
அறிந்துகொள்வதும் அல்ல
நம்மை நாமே
அறிந்து கொள்வது
நீ கண் மூடும்போது
நான் உறக்கம்கொள்வதும்
என் கனவுகளில்
உன் நினைவுகள் வாழ்வதும்
கம்பியில்லா தந்தியில் நீ
என் கதை படிப்பதும்
காதோரச் சில்லிப்பில்
உன்குரல் நான் கேட்பதுவும்
நீளும் உன்சிறகுகள்
பறக்கும் என்
மனமெங்கும் வானம்
தொங்கும் உன்
துப்பட்டாவில்
தூங்கும் என் கானம்
உன் கால்சலங்கையில்
துடிக்கிறது என் இதயம்
உன் பெரு மூச்சில்
வியர்க்கிறது என் உயிர்
அதனால்,
சிறுக்கிறது உன் இடை
அதுவே என் காதலுக்கு
நீ தந்த விடை.
( உலகக் காதலர்களுக்கு ஹப்பி வலண்டைன் டே)
Monday, February 13, 2006
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
காதலர்(களுக்கு) தின நல்வாழ்த்துக்கள்
உங்கள் வருகைக்கு நன்றி சிங்.செயகுமார் ... உங்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்...
கவிதை நன்றாக இருக்கிறது இளந்திரையன்
என்ன இது சிங்.செயகுமாரிடமிருந்து ஒரு வெறும் பின்னூட்டமா? கவிதை எங்கே?
வருகைக்கு நன்றி நாமக்கல் சிபி. ஆமாம் இன்று வெறும் பின்னூட்டம் மட்டுமே....
Post a Comment