வெளிறிப் பரவிய
வெளிச்சப்பொட்டு
களைத்து நிமிர்ந்த
கறுத்தப் பனை
ஓரத்தில்
சரிந்த தென்னை
வேலி இழந்த
வரிசைப் பூவரசு
மடக்கிப் போட்ட
கதவு
மக்கிப்போன
காவோலை
குமிந்துபோன
குப்பை வீடு
தலை
துவட்டிப்போகும்
புழுதிக்காத்து
கண்
கெளவிக்கொள்ளும்
ஒற்றையடிப்பாதை
கையசைக்கும்
மரங்கள்
காலிடைக்
குறுகுறுக்கும்
மண்துகள்கள்
பார்த்துக்
கொள்கின்றேன்
மீண்டும்
வந்ததற்காக அல்ல
மீளமுடியாக்
கணங்களை
நினைத்துக்கொள்ள.
Wednesday, January 18, 2006
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
என்னை, என் மண்ணை கண்ணிலே கொண்டு
வந்த அழகிய கவிதை. கவிதைகள் என்பவை மனதை தொட வேண்டும். அவையே சிறந்த கவிதைகள். அந்த வகையில் என் ஆழ்மனதைத் தொட்ட கவிதை......கவிதைகள் மேலும் எழுத என்வாழ்த்துக்களும்......என்நன்றிகளும்
இளந்திரையன்,
கவிதையை
ஒரு வண்ணத்தாளில் எழுதி சட்டமிட்டு
கையோடு எடுத்துச்செல்லுங்கள் -
ஒரு அழகிய ஓவியமாக.
பாராட்டுகள்.
அன்புடன்
நண்பன்
வருகைக்கு நன்றி நண்பரே!
எல்லோருக்கும் கடந்த காலங்கள் மீள முடியாக் கணங்கள் தான் ...
அவை பற்றிய எண்ணங்கள் எப்போதும் அழகான ஓவியக்விதை தான்.
நன்றி நண்பன்.
-அன்புடன் இளந்திரையன்
Post a Comment