Saturday, January 21, 2006

வா பெண்ணே

பெண்ணே !
ஒளிரும்
நிலவைப் பார்

வண்டுகளின்
இசையைக் கேள்

தோட்டத்தின்
மலர்களைப் பார்

கடலின்
தாலாட்டைக் கேள்

இவையெல்லாம்
யாருக்காக

பயன் கருதா
கருமம் போல

முடிவறியா
இயற்கை நிரப்ப

பிரபஞ்சத்தின்
பசியைப் போக்க

மண்ணில்
விதையைத் தூவ

வா
என்னுடன்
கலந்து விடு

காற்றின்
திசையை அறிவோம்

திக்கின்
எல்லை உணர்வோம்

மனதின்
தொடர்பு அறிவோம்

இதுவே,
வாழ்வின்
முழுமை என்போம்.

1 comment:

Anonymous said...

இயற்கை,என்றுமேமாறவில்லைத்தான்,ஒன்றிற்கு பதில் ஒன்றாகவே......
ஆனால் மனிதனோ???????
புரிதல் அடிபட்டுச் சகதிக்குள்....அநாதரவாய்....
கவிதை வடிவம் அபாரம்.....சிந்தனையுடன் தென்றல்???????????