Saturday, January 21, 2006

அதனால் உன்னோடு

அதனால் எதிரியே
உன்னோடு பேசுகின்றேன்

காற்றுக் கொரு
வேலி போட்டது யார் ?

காட்டுக் கொரு
எல்லை வகுத்தது யார் ?

புயலுக் கொரு
புதுவழி காட்டுவது யார் ?

சுதந்திரத்தின்
சிறகுகளை மறுப்பது கூடுமோ ?

அதனால் எதிரியே
உன்னோடு பேசுகின்றேன்

மரங்கள் பழுப்பது
எனக்காக

மலர்கள் மலர்வது
எனக்காக

கடல்கள் விரிவது
எனக்காக

காலங்கள் பிறப்பது
எனக்காக

அதனால் எதிரியே
உன்னோடு பேசுகின்றேன்

உன் வீட்டு
முற்றத்தை கேட்கவில்லை

உன் முற்றத்து
மரத்தை வெட்டவில்லை

உன் மரத்து
பழத்தை உண்ணவில்லை

உன் பழத்து
விதையை கவரவில்லை

உன் விதையின்
சுதந்திரத்தை பறிக்கவில்லை

என் சுதந்திரத்தின்
மதிப்பை உணர்கின்றேன்

அதனால் எதிரியே
உன்னோடு பேசுகின்றேன்

என் சுதந்திரம்
என்னோடு

உன் சுதந்திரம்
உன்னோடு

இந்த மண்
எம்மோடு

இதை புரிந்துகொள்
பண்போடு

அதனால் எதிரியே
உன்னோடு பேசுகின்றேன்.

1 comment:

Anonymous said...

சுதந்திரம் இதுதான். எதிரியை நேர்கொண்ட நெஞ்சோடு,வலியை புரிய வைத்த கவிதை....வித்தியாசமான தேடலில் பிறந்த
அழகிய கவிதை....மீண்டும் வருவேன்....
எதிர் பார்ப்புடன்.....ஆக்கத்திற்கு நன்றிகளும்
வாழ்த்துக்களும்......