Tuesday, January 31, 2006

முதல் சந்திப்பு

கண்ணிமை மூடுவதற்குள் -ஒரு
புன்னகை மலர்வதற்குள்

விரலின் நடுக்கம் உணர்வதற்குள்
விருட்டென்று
ஒட்டிக்கொள்கிறது பயம்

எல்லாக் கண்களும்
எங்களையே பார்ப்பது போல

இருந்த போதும்
என்னுள் ஏதோ
இடம் மாறிப்போய் விட்டது

2 comments:

இரா.ஜெகன் மோகன் said...

நல்ல அனுபவம்தான் இளந்திரையன்.
முதல் சந்திப்பு ஓர் அருமையான சந்திப்பு.

இளந்திரையன் said...

உங்கள் வருகைக்கு நன்றி. முதல் (உங்கள்) சந்திப்பு இனிமையான அனுபவம் ஆகட்டும்.